Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடி அதிகரிப்பு

9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடி அதிகரிப்பு

செப்டம்பர் காலாண்டின் ஊக்கமளிக்கும் நிதிநிலை முடிவுகளையடுத்து தகவல் தொழில்நுட்பப் பங்குகள் வலுவாக மீண்டதே ஏற்றத்துக்கு முக்கியக் காரணம்.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நிலவிய ஏற்றத்தால், அதிக சந்தை மதிப்புள்ள முதல் பத்து நிறுவனங்களில் ஒன்பதின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. டிசிஎஸ், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக ஆதாயம் பெற்றன.

கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2,256.94 புள்ளிகள் (3.11 சதவீதம்) உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 625.7 புள்ளிகள் (2.77 சதவீதம்) அதிகரித்தது.

அதிக சந்தை மதிப்பு கொண்ட முதல் பத்து நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல்ஐசி, இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் சந்தை மதிப்பு உயர்ந்தது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மட்டுமே சரிவைச் சந்தித்தது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.1,08,542.63 கோடி உயர்ந்து, ரூ.8,91,134.96 கோடியானது. பார்தி ஏர்டெலின் மதிப்பு ரூ.61,406.53 கோடி அதிகரித்து, ரூ.11,88,815.45 கோடியை எட்டியது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.55,893.05 கோடி உயர்ந்து, ரூ.4,71,409.41 கோடியானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.53,047.56 கோடி அதிகரித்து, ரூ.16,37,437.19 கோடியாக உயர்ந்தது.

எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.32,379.05 கோடி உயர்ந்து, ரூ.11,22,628.07 கோடியானது. ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பு ரூ.30,769.95 கோடி அதிகரித்து, ரூ.10,02,871.44 கோடியை அடைந்தது.

பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ.14,786.65 கோடி உயர்ந்து, ரூ.6,11,326.72 கோடியானது. எல்ஐசியின் மதிப்பு ரூ.4,933.50 கோடி அதிகரித்து, ரூ.5,02,204.82 கோடியை எட்டியது. பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பு ரூ.3,323.07 கோடி உயர்ந்து, ரூ.8,87,722.84 கோடியானது.

இதற்கு மாறாக, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.9,232.26 கோடி குறைந்து, ரூ.4,99,725.06 கோடியாகச் சரிந்தது.

இதுகுறித்து என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொன்முடி.ஆர் கூறும்போது, ‘‘இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த வாரமும் மீட்சியைத் தொடர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை சுமார் ஆறு மாதங்களில் இல்லாத சிறந்த வாராந்திர செயல்திறனைப் பதிவு செய்தன.

செப்டம்பர் காலாண்டின் ஊக்கமளிக்கும் நிதிநிலை முடிவுகளையடுத்து தகவல் தொழில்நுட்பப் பங்குகள் வலுவாக மீண்டதே ஏற்றத்துக்கு முக்கியக் காரணம். பல முன்னணி நிறுவனப் பங்குகளில் மீண்டும் வாங்கும் ஆர்வம் ஏற்பட்டதும் சந்தைக்கு ஆதரவளித்தது,’’ என்றார்.

ஒன்பது நிறுவனங்களின் மதிப்பில் ஏற்பட்ட உயர்வில் டிசிஎஸ் முதலிடத்தையும், பார்தி ஏர்டெல் இரண்டாவது இடத்தையும், இன்ஃபோசிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இப்பட்டியலில் சந்தை மதிப்புத் தரவரிசையில் டிசிஎஸ் ஐந்தாவது இடத்திலும், இன்ஃபோசிஸ் பத்தாவது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தது. அடுத்தடுத்த இடங்களில் பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல்ஐசி, லார்சன் அண்ட் டூப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகியவை இடம்பெற்றன.

முந்தைய செய்தி
திருச்சிதான் NO.1 - எதுலன்னு தெரியுமா?
அடுத்த செய்தி
இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.52,100 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

தொடர்புடைய செய்திகள்